Monday, May 4, 2026

நிசப்தம்


சிறகுகளில் படர்ந்திருக்கும் பனித்துகள்களை

உதறியபடி பறக்கின்றன சிட்டுக்குருவிகள்.

கனத்த பனி மெத்த அடர்ந்திருக்கும்

வெற்றுக்கிளைகள் கொண்ட

ஃபிர் மரக்காட்டுக்குள்

என் மனமோ – பனிப்புகை கவிந்திருக்கும்

அந்த நீல நதியில் – ஆளற்ற

ஒரு படகில் தனியே மிதக்கிறது.

மலைகள் எதிரொலிக்காத காலம் இது.

நீ நீரில் எறியும் ஒரு கல்

நதியின் ஆழம் அடையும் முன்

இடைவழியில் உறைந்து போகிறது.

பனித்தூவல்கள் மென்மையாகத்

தரையை அடையும்

மிக மிக மெல்லிய விசும்பலைத் தவிர

எதுவுமே கேட்காத பெரும் நிசப்தம்.

No comments:

Post a Comment