Monday, May 4, 2026

எப்படிச் சொல்வது?


​உன்னை இன்னமும்

இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை

இன்னும் காத்திரமாக

இன்னும் அழுத்தமாக

இன்னும் முழுமையாக

எப்படிச் சொல்வது?

வற்றிக் கொண்டிருக்கும்

ஒரு கிணற்றின் ஆழத்தில்

எஞ்சியிருக்கும் ஒரு கை நீரை

மீன் பெருவேட்கையுடன் நேசிப்பது போல் என்றா?

உன் பிரிவை எதிர்நோக்குவது

எவ்வளவு பதைபதைப்பு

எவ்வளவு அஞ்சுதல்

எவ்வளவு கையறுநிலை

என்பதை எப்படிச் சொல்வது?

பேய்மழைக்கு ஒதுங்கிய

இருட்குகையினுள்

பசும்பழுப்பு நிறத்தில் ஒளிரும்

கொடிய விலங்கொன்றின் கண்களைக்

காண்பது போல் என்றா?

No comments:

Post a Comment