Monday, May 4, 2026

மோனமெனில்

எனக்கென நீ கட்டிய வீட்டில்

தினமும் கவிதைகள் பிறக்கின்றன

மேஜையின் இழுவறையில்

கட்டிலின் அடியில்

திரைச்சீலை மடிப்புகளில்

கால்விரல் இடுக்குகளில்

ஒளிந்து விளையாடுகின்றன

தேடிப்பிடித்து கூட்டி எடுத்து

சேகரிக்கிறேன் அட்டைப் பெட்டிகளில்

சாம்பல் பூனைகளாய் துள்ளும்

அவற்றின் நடுவே

கவனத்தினின்றும் தவறவிட முடிவதில்லை

தினமும் உனக்காய்

பிறக்கிற கவிதை மட்டும்

கண்மூடி வாளாவிருப்பதை


No comments:

Post a Comment