Monday, May 4, 2026

யாமம்

 அகாலத்தில் உருக்கமாய் உரக்க

கூவும் ஒரு குயிலின் குரல்

குளியலறை தரைப் பிளவுகளில்

துளிர் விட்டிருக்கும் ஒரு விதை

அமாவாசை என்றெண்ணிய மாலை

கிழக்கில் முளைக்கும் வெள்ளிப் பிறை

மழை துவங்கும் நாளில்

சன்னலில் வந்தமரும் பட்டாம்பூச்சி

இப்படியாக

அசர்ந்தப்பமாகவும் அறிவிக்கப்படாமலும்

நிகழ்ந்து விடுகின்றது

உன் வரவும் பிரிவும்

மஞ்சள் வாகை மலர்கள்

மண்ணில் வீழும் ஒலியைக்

கேட்டவாறு கடந்து செல்கிறேன்

காமம் பெருகும் யாமங்களை


No comments:

Post a Comment