ஏவாள் கடித்த இடத்தின் தித்திப்பை சுவைத்தபடி
பழத்தை சுற்றி சுருண்டு கிடக்கிறது சர்ப்பம்
இமைகளற்ற சிறிய கண்கள் கொண்டு
திருப்தியுடன் காண்கிறது
நிர்வாணம் மறைக்க பதுங்கும் அவர்களை
ஆதாம் அதை பாவத்தின் கனி என்கிறான்
ஏவாள் அதை ஞானத்தின் கனி என்கிறாள்
ஊழித்தீ போன்ற கோபத்தின் திசையை நோக்கி
விதிர்விதிப்பவனை அணைத்து
அவன் காதில் முணுமுணுக்கிறாள்
பாவத்திற்கு பயப்படாதிருத்தலே
ஞானத்தின் ஆரம்பம் என
தன் மார்பு பள்ளத்துள்
வழவழப்பான சருமத்துடன் ஊரும்
சர்ப்பத்தை தடவியபடி ஏவாள்
No comments:
Post a Comment