Monday, May 4, 2026

அளவு அன்பு

எண்ணற்ற மதுசாலைகள் திறந்தே கிடக்கும்

எல்லா தெருக்களிலும் ஈரமாய்

மீண்டும் மீண்டும் நீட்டப்படும் 

அத்தனை கோப்பைகளுக்கும்

வழிய வழிய ஊற்றிக் கொடுக்கப்படும்

சிறிதும் மறுப்பேதும் இன்றி

சுட்ட மீனோடும் உப்பிட்ட பைனாப்பிளோடும்

வெண்மணற்கரையில் தன்னைத் தேடி வருபவர்க்கு

சதா பெருங்கருணையுடன் காத்திருக்கிறது

ஓய்வற்ற மாஹேயின் மதுக்கடல்

அத்தனை நிரந்தரமானதா..?!

உன் சொந்த ஊரில் வரிசையில் நின்று

வாங்கி அருந்தப்படும் அளவு மதுவின்

சிறிய போதையின் உச்சியில் நின்று

நீ பகர்ந்திடும் அன்பு . .! 


No comments:

Post a Comment