தனித்த இரவின் பயணம் முடிக்கும்
குளிர் அடர்ந்த அதிகாலை இருளில்
மேலும் துக்கத்தைத் தருவதாக இருக்கிறது
கரித்துகள்கள் மிதக்கும் இந்த இரயில்நிலையம்
இறுக்கமாக புதைந்து கிடக்கும் தண்டவாளத்து
சக்கரங்களின் அடியிலும்
கசக்கி எறியப்பட்ட காலியான
தண்ணீர் பாட்டில்களிலும்
இறக்கி வைத்திருக்கிறேன் நிராகரிப்பின் பளுவை
பயணம் வலிந்து திணித்து விட்டிருக்கும்
பெருஞ்சுமையை இழுத்துக்கொண்டு நகர்கிறேன்
அன்றொரு இரயிலுக்கான காத்திருப்பில்
நீ அமர்ந்திருந்த இருக்கையில்
வெம்மை இன்னும் மீதமிருக்குக்மென
No comments:
Post a Comment