நீருக்கடியில் அமிழ்ந்தபடி நீந்தி
மீன்களை அலகில் கவ்விக் கொண்டு
குளத்தின் மேற்பரப்பிற்கு வந்து
சிறகுலர்த்தியபடி உண்ணும்
கரிய நீர்க்கோழி
பச்சை படித்துறையில் – பொரி மேயும்
சிறிய மீன்குஞ்சுகளை – அவை
நல்ல திரட்சியாகும் உரிய பருவம் வரை
விட்டு வைப்பதைப் போல்
மனதைக் குத்தியபடி இருக்கும்
சிறிய முட்கள் – பழுத்து
விஷமேறி கூராகும்
பனிக்காலத்திற்கென விட்டுச் செல்கிறது
கிளைகள் தோறும்
மலர்களைக் கொய்தபடி நடக்கும்
இம்மாரிக் காலத்தின் கருத்த இரவு.
No comments:
Post a Comment