Monday, May 4, 2026

பிரிவு

என் கண்ணாடித் தொட்டி மீன்களின்

பெயர்கள் மறக்கும் புறக்கணிப்பும்

என் வீட்டுப் பூனைகளின்

பசி உணரா அறியாமையும்

தந்துவிட்டிருக்கிறது எனக்கு

தூரதேசம் ஒன்றிற்கு செல்வதாய்

நீ இலகுவாய் செய்துவிட்டிருக்கும்

ஓர் அறிவிப்பு

அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்கிறாய்

அணில்களும் தவிட்டுக் குருவிகளும்

முற்றத்தில் காயும் என் நெல்மணிகளை

சதா திருடிய வண்னமிருப்பதை

எப்படி புரிய வைப்பது உனக்கு?

பிரிவென்று ஒன்றை நீ தராமலேயே

உன் மீதான எனது பிரியங்கள்

வளர்ந்து கொண்டே தான் இருக்குமென்று


No comments:

Post a Comment