தேடி அனுப்புகிறேன் என்கிறாய்
எதைத் தேடுவாய்?
எதை அனுப்புவாய்?
வேண்டும் பொருள் யாதென
அறியாத் தேடலுக்கு
இலக்கு தான் என்ன.. ?
உன் முடிவிலித் தேடல்களின் அர்த்தமின்மை
நீர்த்துப் போகச் செய்கின்றது
என் காத்திருப்பின் தீர்க்கத்தை.
மெல்ல தேய்ந்தபடி நகரும் முழுநிலவோடு
நான் சேர்ந்து செல்லும்
இந்தச் சாலை வளைவின் இருபுறமும்
காத்திரமாய் பூமியின் மையம் தேடும்
யூகலிப்டஸ் மரங்களின் வேர்கள்
நிலத்தடி நீரை
உறிஞ்சித் தீர்க்கின்றன
முழுவதுமாய்...
No comments:
Post a Comment