Monday, May 4, 2026

இலைப் பச்சை


​ஒரு பட்ட மரத்தின்

வெற்றுக் கிளைகளில்

இரு பச்சைக் கிளிகள்

வந்து அமர்கின்றன

சிறகசைத்து . . சிறகசைத்து . .

தன் மீது

இலைகள் அசைந்த காலம்

வந்து போகிறது

மரத்தின் நினைவில்.

No comments:

Post a Comment