முன்பொரு காலத்தில்
ஒரு காதல் இருந்தது
அது இருவருக்கிடையில் இருந்தது.
பின்பு
இருவருக்கான காதலின்
மொத்தப் பொறுப்பும்
அதில் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்தச் சிற்றெறும்பு தூக்கிச் செல்லும்
அதன் ஆயுளுக்கான
வெல்லத் துண்டு
அதன் முதுகை
ஒடித்துக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment