ஆற்றுப்படுத்துதல் என்றால்
என்ன அன்பே... ?
எல்லாம் கடல்வழிப் படுத்துதல் தானே..!?
என்னிடம் உள்ளது
ஆயிரம் ஏக்கர் கடல்
உன் அத்தனை நதிகளுக்குமான
மட்டற்ற கொள் திறனோடு.
என்ன...
வெளிறிய செவுள் கொண்ட
உன் நன்னீர் மீன்களால்
தாதுக்கள் செறிந்த
இவ்விரி உவர் நீரின் பக்கம்
எட்டிப் பார்க்கக் கூட இயலாது!
No comments:
Post a Comment