அனாமிகாவின் ஆட்டுக்குட்டி
தன் கொட்டிலுக்கான எல்லா
சாலைகளையும் தெரிந்து வைத்திருக்கிறது
பசும்புல் நெளியும் பள்ளத்தாக்குகளையும்
இரகசியமாய் சுனை நிரம்பும்
மறைவிடங்களையும் கூட
அந்தி பரவும் வெளிகளில்
உதிரும் நட்சத்திரங்களை
எண்ணிக் கொள்கிறது
கூதிர் கால இரவுகளில்
நெருப்பு மூட்டிக் குளிர்காயும்
புராதான கிராமங்களை அறிகிறது
அனாமிகாவின் ஆட்டுக்குட்டி
எங்கெங்கிலும் அனாமிகாக்களை
கண்டு கொள்கிறது
தற்போது
வழி தப்பி விட்ட கர்த்தனைத்
தேடிக் கொண்டிருக்கிறது
அனாமிகாவின் ஆட்டுக்குட்டி
No comments:
Post a Comment