கவிதைகள்
காத்திருப்புக் கணங்களின் களைத்த
வாசத்தை நுகர்ந்திருக்கிறாயா?
கவனிப்பாரற்ற சந்நிதியில் உலரும்
நீர்மை வற்றி நிறமிழக்கும் பூக்களின்
காய்ந்த இதழ்கள் கசிந்து வெளியேற்றும்
மெல்லிய உயிரின் கனத்த மணம் அது
என் சுவாசத்தின் வாசத்தை ஒத்ததும் கூட.
No comments:
Post a Comment