என் உள்ளங்கையில்
பதிந்து விட்டிருக்கும்
உன் ரேகைகள் ஓடுகின்றன
நேற்றிரவு பயணத்தில்
நாம் தவறவிட்ட பாதையின்
திடீர் திருப்பங்களோடும்
தடுமாற்றங்களோடும்
சிறு துளிகள் மழையெனப் பொழியும்
பனிப்புகை விலகாமல் படரும்
குளிர் தேசம் உனது
சுவையின்றி சுடுகிறது இன்று
நீயின்றி அருந்தப்படும் தேநீர்
உன் மலையூரில் - நீ
செல்லுமிடங்களில் எல்லாம்
உன்னைப் பின்தொடர்ந்து செல்கிறது
ஒற்றை மேகமாய் என் நினைவுகள்
சிறு பிள்ளை கையில் பிடித்து
மறந்து போன பட்டமென!
No comments:
Post a Comment