உன் லௌகீக லட்சியங்களில்
இல்லை ‘இறவாத காதல்’.
அடைய வேண்டிய
இலக்குகளின் பட்டியலில்
ஏற்கனவே அடைந்தவற்றை எல்லாம்
சிவப்பு மசியில் அடித்து விட்டிருந்தாய்.
ஆதலால்..
இப்போது..
தான் தங்கும் இடமெல்லாம்
விளக்கேற்ற வேண்டி சிம்டாவை
கையோடு தூக்கிச் செல்லுமொரு
நாக சன்யாசியைப் போல
உன் பாதைகளில் ஒளி கூட்ட
என் காதலின் வெளிச்சத்தோடு
உன்னைப் பின் தொடர்வது
உனக்கு உறுத்தலாகிறது.
வருந்தத் தேவையில்லை நீ
தன் கடன் பணி செய்து கிடப்பதே
என்பது – எல்லோருக்கும்
பொருந்தும் தானே..!
இன்னும் கவலை எதற்கு...?
இதோ பார்..
தன் நெறி தவறாது ஒழுக முயலும்
காபாலிகன் ஒருவன்
கையிலேந்தும் திருவோடு என்பது
மாண்டு விட்ட எவனோ ஒருவனின்
மயானத்து மண்டையோடு தானே..!!
No comments:
Post a Comment