Monday, May 4, 2026

சன்னல் மேகம்

 சிறு மழை மேகமொன்று

என் வீட்டில் இடம் கேட்கிறது

பின்னொரு அந்தியில் 

என் எல்லா சன்னல்களிலும்

வானவிற்கள் தோன்ற வைக்கும்

இரகசிய உறுதியளிப்போடு

வில்லின் வளைவில் கூடுகட்டும்

பறவையொன்றைத் திசைகள் கடந்து

அனுப்புவேன் ஒரு நாள்

என் குரல் நுழைய முடியாத

உன் படுக்கையறைக்கு - கலையாத 

உன் உறக்கத்தின் மீது தன்

மெல்லிய இறகொன்றை உதிர்க்க

அன்று விழிக்கையில் நீ நுகரலாம்

உன் அறையெங்கும் பெருகியிருக்கும்

என் தனிமையின் வாசத்தை


No comments:

Post a Comment