Monday, May 4, 2026

புன்னகையின் திசைகள்

 என் பழம்பெரும் ஊரின்

வெயிலறையும் தெருக்களில்

உன் புன்னகைகள் உலர்கின்றன

புழுதியில் புதைந்ததை அகழ்ந்து

தூசு துடைத்து சேர்க்கிறேன்

கலயம் நிரம்பும் நெருக்கத்தில்

மீண்டு வருகிறாய்

சேர்த்த புன்னகைகள் பொடியாக்கி

மணலாய் விசிறி எறிகிறாய்

இம்முறை காற்றின் திசைகளில்


No comments:

Post a Comment