Monday, May 4, 2026

வழியும் தனிமை

உடலெங்கும் வழிகிறது

பச்சையாய் பிசுபிசுப்பாய்

கழுத்தைக் கவ்வியிருக்கும்

தனிமையின் எச்சில்

வழித்தெறிய முற்படும்

ஒவ்வொரு முயற்சியிலும்

மேலும் ஒன்றென முளைக்கிறது

தனிமையின் கோரப்பல்

உறக்கத்தின் வாசல் மூடியிருக்கும்

கடவுளின் அந்தப்புரத்தில்

வெடித்து உடைகின்றன

பச்சை நிறத்து மது ஜாடிகள்


No comments:

Post a Comment