பிரத்யேகமாக என்னை அழைப்பதற்குக் கூட
உன்னிடம் எந்தப் பெயரும் இல்லை.
கணிப்பொறியாளன் ஒருவனின்
விரல்களின் கட்டுப்பாட்டில் அரங்கேறும்
ஒளித்தோற்ற விளையாட்டின்
பாத்திரங்கள் என
ஒரே கூரையின் கீழ்
சுயவிருப்பங்களற்று இயங்குகிறோம்.
பரஸ்பரம் அணுகாமல் வாழ்வதற்கு
கண்ணாடிச் சட்டத்தின் கீழ்
சிக்கிக் கொண்ட இரு முட்களென
இவ்வளவு நெருக்கம் தேவையில்லை.
எண்ணிக்கையிட்டு நீ செய்யும்
பிரயத்தனங்கள் – எனக்குப்
புரிவதில்லை என்கிறாய்.
ஆம் – உணர முடிவதில்லை தான்.
ஏனெனில்
ஒருபோதும் என் கவிதைகளை
நான் கணக்கெழுத அனுப்புவதில்லை.
No comments:
Post a Comment