Monday, May 4, 2026

மட்டும்


​எலும்பு வரை ஊடுருவும்

குளிரைப் போக்க

நீ என்னவெல்லாம் செய்யக்கூடும்?

கொஞ்சம் மது அருந்தலாம்

கனத்த கம்பளியொன்றைத் தேடலாம்

ஒரு கனப்பை மூட்டலாம்

காதலற்ற காமமுமற்ற

ஓர் உடல் - என்னை

தழுவிக் கொள்ளும் போது

நான் வெப்பத்தை மட்டும்

எடுத்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment