Monday, May 4, 2026

​நீ அழைத்து வரும் தனிமை


​நான் அவ்வளவு தனிமையில்

இருக்கிறேன் என்று

உன்னிடம் சொல்ல விரும்பினேன்.

தனிமையல்லாது வேறொரு நிலையை

உணர்ந்திராத உனக்கு – அது

விளங்க முடியாத புதிராகிறது.

நீ இருக்கிற போது மட்டுமே

அது என்னிடம் வந்து சேர்கிறது.

இந்த அறைக்குள் நீ நுழையும் போதே

என்னுடைய தனிமையையும்

உடன் அழைத்து வருகிறாய்.

உன் நிழலைப் போல

உன்னைப் பின் தொடர

அதைப் பழக்கி இருந்தாய்.

நீ அதைப் புரிந்து கொள்ள முயன்று

தோல்வியுடன் மௌனமாகிறாய்.

எதுவுமே இடம் மாறாத வீட்டில்

தனிமை மட்டும்

மாறி மாறி

எல்லா இடங்களிலும் அமர்கிறது.

No comments:

Post a Comment