கவிதைகள்
அசைவுகளற்ற குளத்தின் மேற்பரப்பை
உற்றுப்பார்த்தபடி மேலே வட்டமிடுகிறது
சட்டென்று நீருக்குள் மூழ்கி
அலகில் கவ்விக் கொண்டு எழும்புகிறது
சலனமுற்றுக் கலங்கும் குளத்தைக் குறித்து
யாதொரு அக்கறையுமில்லை பறவைக்கு
No comments:
Post a Comment