Monday, May 4, 2026

என்ன செய்ய?

 ஒரு கசந்த கோப்பை பானமென

பருகுகிறேன் இந்த நெடிய இரவை

துளியாக துளித் துளியாக

வைக்கப்பட்ட ஒரு நம்பிக்கையின் இழப்பு

ஒரு பசிய துரோகத்தின் வலி

எல்லாவற்றயும் அர்த்தமற்றதாக்கி விடுகிறது

வாழ்வின் சமன்பாடுகளை

பின்னிரவின் அமைதியை

எல்லாவற்றையும். . .

மழையில் நனைந்த ஈசலிறகுகள்

சிறிதே அசைந்து இடம் மாறுகின்றன

தனித்தெரியும் தெரு விளக்கின்

மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில்

சாம்பலென புலரும் வைகறையிலும்

இன்னும் மீதமிருக்கிறது

நாவின் சுவை அரும்புகளில்

விழுங்கவே முடியாததொரு கசப்பு


No comments:

Post a Comment