சுழித்தோடும் இந்த நதியை
பார்த்தாயா அன்பே
ஏதேன் தோட்டத்தின்
ஏதோவொரு பழுப்பு இலையை
சுமந்து கொண்டே நகர்கிறது
யுகம் யுகமாய்
விழுதுகள் போல் வேர்கள் இறங்கும்
மலைச்சரிவில் பயணிப்பவன்
நைந்த உடலில் போர்த்திய
கம்பளி - தலைமுறைகளுக்கு
முந்தைய ரோமம்
தன் முதல் இரையை
கொன்றிருக்கும் அந்த
பாலை நில மாமிசப்பட்சிணிக்கு
முன்பே பழகியிருக்கும்
வேட்டையின் உதிர சுவை
பருவத்தின் முதல் மழை பெய்த
அழுத்தமான இரவை
தொடரும் மதர்ப்பான புலரியில்
இலைகளில் தங்கிய ஈரமென
சொட்டிக் கொண்டிருக்கிறது
ஆதி காமம்
No comments:
Post a Comment